பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் - கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-06-12 05:04 GMT

சென்னை,

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இனி வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்