பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.;

Update: 2023-05-16 21:13 GMT

பெங்களூரு:

பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபர் நடுரோட்டில் வாளுடன் சுற்றி திரிந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண்ணை, அந்த நபர் தடுத்து நிறுத்தினார். அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பிடுங்கியதுடன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்து அவ்வழியாக சென்ற மற்றொரு பெண் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தார்.

உடனே இளம்பெண்ணிடம் செல்போனை கொடுத்து விட்டு அந்த நபர் ஓடிவிட்டார். நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, வாளுடன் அந்த வாலிபர் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ காட்சிகள் மூலமாக மர்மநபரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்