அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்
அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே அதானி குழுமத்தின் நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டு அறிக்கை குறித்து விசாரிக்கவும், ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை இன்று விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் எனவும் இது தொடர்பாக பிரதமர் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பங்குச்சந்தையில் அதானியின் சரிவு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த நோக்கமும் இல்லை எனவும் கூறினார். பாதுகாப்பு துறைக்கு குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.