ராணுவ காலியிடங்களை நிரப்ப மோடி அரசுக்கு நேரம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

கட்சிகளை உடைக்க மோடி அரசுக்கு நேரம் இருக்கும்போது, ராணுவத்தில் நிலவும் காலியிடங்களை நிரப்ப நேரம் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

Update: 2023-07-04 08:20 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ராணுவத்தில், மேஜர், கேப்டன் ஆகிய பதவிகளில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

அதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மோடி அரசுக்கு அரசியல் கட்சிகளை உடைக்க நேரம் இருக்கிறது. ஆனால், ராணுவத்தில் காலியிடங்களை நிரப்ப நேரம் இல்லை போலும். 'தேசியம்' குறித்து நாள்தோறும் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், மற்றவர்களை விட அதிகமாக ராணுவத்துக்கு துரோகம் செய்கிறார்கள்.

ராணுவத்துக்கு துரோகம்

ராணுவத்திலும், மத்திய ஆயுதப்படைகளிலும் தற்போது 2 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருக்கின்றன. ராணுவ வீரர்களுக்கு செலவழிக்க மோடி அரசிடம் நிதி இல்லை என்பதற்கான வெளிப்படையான ஒப்புதல்தான், 'அக்னிபத்' திட்டம் ஆகும்.

'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்திலும் ராணுவ சமூகத்துக்கு மோடி அரசு துரோகம் செய்தது. தேச பாதுகாப்புக்கு மோடி அரசும், பா.ஜனதாவும் முன்னுரிமை அளிக்கவில்லை. மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்