பயன் இல்லாத 1,550 சட்டங்கள் ரத்து- மத்திய மந்திரி அர்ஜுன் மேக்வால்

தொழிற்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் செயல்படும் தனி வணிக நீதிமன்றங்கள் மற்றும் நடுவர் மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது என்று அர்ஜுன் மேக்வால் கூறியுள்ளார்.

Update: 2024-03-02 13:11 GMT

உஜ்ஜைன்,

மக்களை தொந்தரவு செய்யும் 1,550-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை நரேந்திர மோடி அரசு ரத்து செய்துள்ளது என்று மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் மேக்வால் தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற்ற பிராந்திய தொழில்துறை மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அர்ஜுன் மேக்வால் கூறியதாவது:-

மோடி அரசு மக்களையும் தொழிலதிபர்களையும் தொந்தரவு செய்யும் 1,550-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளது. ஒரு காலத்தில், தொழிலாளர்களை நோய்களிலிருந்து பாதுகாக்க தொழில்துறை அலகுகளை வெள்ளையடிக்கும் சட்டம் இருந்தது. இது போன்ற தேவையை இழந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழிற்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் செயல்படும் தனி வணிக நீதிமன்றங்கள் மற்றும் நடுவர் மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. உரிய விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு, நடுவர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கியுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்