மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம்
மராட்டியத்தில் 3.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராடிய மாநிலம் சதாராவில் நேற்று இரவு 11:36 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது, 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. முன்னதாக நேற்று, உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.