மேகாலயாவில் பதற்றம்: முதல் மந்திரி அலுவலகத்தை சுற்றி வளைத்து கும்பல் தாக்குதல்

மேகாலயா முதல் மந்திரி அலுவலகத்தை சுற்றி வளைத்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2023-07-24 16:22 GMT

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலாயாவில் முதல் மந்திரி அலுவலகத்தை சுற்றி வளைத்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் போது முதல் மந்திரி கான்ராட் சங்மா அலுவலகத்தில் தான் இருந்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேகலாயாவில் குளிர் கால தலைநகராக துரா நகரத்தை அறிவிக்க வலியுறுத்தி கரோ- மலைப்பகுதியில் வசிக்கும் சமூகத்தினர் உண்ணா விரத போரட்டம் நடத்தி வருகின்றனார். இந்த நிலையில், திடீரென்று இன்று மாலை முதல் மந்திரி அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து சங்கமா வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அங்கு தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும்,நமது அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில், மேகாலயா மாநிலம் உள்ளது. மேகாலயாவில் தலைநகரம் "ஷில்லாங்' ஆக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்