வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ... திருப்பி அடித்த வாக்காளர் - வாக்குச்சாவடியில் பரபரப்பு

எம்.எல்.ஏ.வை அறைந்த வாக்காளர் மீது, அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-13 07:34 GMT

தெனாலி,

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தெனாலி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏ.விடம் வாக்காளர் ஒருவர் வரிசையில் வருமாறு கூறினார். இது தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அந்த வாக்காளர் எம்.எல்.ஏ.வை திருப்பி அடித்தார்.

எம்.எல்.ஏ.வை அறைந்த வாக்காளர் மீது, எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்