ராஜஸ்தான்: கானாமல் போன சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!
ராஜஸ்தானில் கானாமல் போன எட்டு வயது சிறுமி, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர் பகுதியில் நேற்று எட்டு வயது சிறுமி திடீரென கானாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.
அப்போது சிறுமி, வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.