முக்கோணக் காதல்: வங்கி அதிகாரி இளம்பெண் கொலை; உடல் காட்டுபகுதியில் எரிப்பு

ராய்பூரில் முக்கோணக் காதலால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Update: 2022-12-02 08:24 GMT

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனுகுர்ரே ( 26)என்ற இளம்பெண் வேலைபார்த்து வந்தார். தனு குர்ரே கோர்பா மாவட்டத்தில் வசிப்பவர். தனுவை நவம்பர் 21 முதல் காணவில்லை. தனுவின் குடும்பத்தினர் நவம்பர் 22 அன்று ராய்பூரில் உள்ள பாண்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நவம்பர் 21ஆம் தேதி ஒடிசாவைச் சச்சின் அகர்வால் (28) என்பவருடன் பலங்கிருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுகுர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

தனுவின் பெற்றோர் மகளின் உடலை அடையாளம் காட்டியுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் தனு சுட்டுக்கொல்லப்பட்டதும், பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

தனு குரே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் அகர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வால் நவம்பர் 19ஆம் தேதி ராய்ப்பூருக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர் தனு குர்ரேவுடன் ஒரு மாலில் சினிமா பார்த்துள்ளனர். படம் பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், பிலாஸ்பூரில் வசிக்கும் இளைஞரிடமிருந்து தனு குர்ரேவின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சச்சின் அகர்வால் தனுவை கொலை செய்து பலங்கிர் காட்டுபகுதிக்கு கொண்டு சென்று எரித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்