உ.பி: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-08 04:58 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த அதேகிராமத்தை சேர்ந்த சரல் யாதவ் (வயது 19) என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

நடந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் சரலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்