கேரளாவில் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரும்பாவூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிளைவுட் நிறுவனத்தில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இஜிபுல் இஸ்லாம் என்ற நபர் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணுடன் பழகி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவரை பிரிந்த அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் தாயார் இல்லாத நேரத்தில் சிறுமியை இஜிபுல் இஸ்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் சிறப்பு கோர்ட்டு, இஜிபுல் இஸ்லாமுக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.