புதிதாக கட்டப்பட்டு வரும் அதானி நிறுவனத்தில் 'திடீர்' தீ விபத்து
புதிதாக கட்டப்பட்டு வரும் அதானி நிறுவனத்தில் ‘திடீர்’ தீ விபத்து ஏற்பட்டது.;
நொய்டா,
டெல்லி அருகே நொய்டாவில் தகவல் மையம் ஒன்றை அதானி நிறுவி வருகிறார். இதற்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிறுவனத்தில் வெல்டிங் பணிகள் நடந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டுகளில் தீப்பிடித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த தீ விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.