மந்திரி எம்.டி.பி. நாகராஜ் மைத்துனர் வீட்டில் வருமானவரி சோதனை

பெங்களூருவில் மந்திரி எம்.டி.பி.நாகராஜின் மைத்துனர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-02 19:36 GMT

பெங்களூரு:

மந்திரியின் மைத்துனர்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறிய தொழில் துறை மந்திரியாக இருந்து வருபவர் எம்.டி.பி.நாகராஜ். இவரது மைத்துனர் சந்திரசேகர். இவர், ரியல்எஸ்டேட் அதிபர் ஆவார். சந்திரசேகர் தனது குடும்பத்துடன் பெங்களூரு ககதாசநகரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில், சந்திரசேகர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினார்கள். நேற்று காலையில் இருந்து மாலை வரை இந்த சோதனை நடந்தது. இதற்காக 2 கார்களில் 8 அதிகாரிகள் வந்திருந்தனர்.

வருமான வரித்துறையினர் சோதனை

சந்திரசேகரின் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ரியல்எஸ்டேட் தொழில் மூலமாக அவருக்கு கிடைத்த வருமானம், அதற்காக அவர் உரிய வருமான வரி செலுத்தி உள்ளாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது சந்திரசேகர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரியஸ் எஸ்டேட் மூலமாக சந்திரசேகர் ஏராளமான பணம் சம்பாதித்ததாகவும், அவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததுடன், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரசேகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மந்திரி எம்.டி.பி. நாகராஜின் மைத்துனர் வீட்டில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்