பெங்களூரு சிறையில் மந்திரி அரக ஞானேந்திரா ஆய்வு
பெங்களூரு சிறையில் மந்திரி அரக ஞானேந்திரா திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
பெங்களூரு:
பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உள்ளது. மைசூரு, பெலகாவி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கைதிகளுக்கு சட்டவிரோதமாக சலுகைகள் அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் சிறைக்குள் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நேற்று திடீரென நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலோக்மோகன், பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது அவர், சிறையில் போதைப்பொருள் உள்பட சட்டவிரோத செயல்களை தடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.