பீகாரில் காங்கிரசை வளர்க்க... வரும் 5-ந்தேதி மினி இந்திய ஒற்றுமை யாத்திரை; கார்கே முடிவு

பீகாரில் காங்கிரசை வளர்த்தெடுக்க வரும் 5-ந்தேதி மினி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்த அக்கட்சி தலைவர் கார்கே முடிவு செய்துள்ளார்.;

Update: 2022-12-28 16:11 GMT



பாட்னா,


ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியை அடைந்து உள்ளது.

இந்த நிலையில், பீகாரில் காங்கிரசை மீண்டும் வளர்த்தெடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வருகிற 5-ந்தேதி பீகாரில் மினி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்துவது என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்துள்ளார்.

இதனை அவர் பங்கா நகரில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நாளில் மிக பெரிய பேரணி நடைபெறும். அது நாட்டுக்கு ஒரு செய்தியை அளிக்கும் என பீகார் காங்கிரஸ் செயல் தலைவர் அசோக் குமார் கூறியுள்ளார்.

முதலில், காங்கிரஸ் நிறுவன நாளான (டிசம்பர் 28-ந்தேதி) இன்று இந்த யாத்திரையை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. பின்பு ஜனவரி 5-ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதில் பெரிய அளவில் பேரணி நடத்தி கார்கே உரையாற்றுவது என்று முடிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்