சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து - சிறுவன் பலியான சோகம்
மினி பஸ் கவிழ்ந்து விபத்தில் சிக்கி 11 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.
திருவனந்தபுரம்,
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது. திருவண்ணாமலை வாழவச்சனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய அய்யப்ப பக்தர்கள் குழுவினர் நேற்று முன்தினம் சபரிமலைக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மதியம் பம்பையில் இருந்து ஒரு மினி பஸ்சில் புறப்பட்டனர்.
இந்த மினிபஸ் மதியம் 2.45 மணிக்கு பிலாப்பள்ளி அருகே ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நடுரோட்டில் மினி பஸ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 11 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். இதில் கவின் என்ற 3 வயது சிறுவன் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். அவருடைய தந்தை ராஜசேகரன் படுகாயமடைந்தார்.