மணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு
மணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.;
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில், சுதந்திர தினத்தை சீர்குலைக்கும்வகையில், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப்படை இயக்கத்தின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தவுபால் மாவட்ட போலீசும், அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரும் யாரிபோக் பகுதியில் குவிக்கப்பட்டனர். அங்கு தேடுதல் வேட்டையை தொடங்கினர். வேறு சில பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்தது.
இதில், ஆயுதங்களுடன் 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு சிறுவனும் பிடிபட்டான். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வெளிமாநிலத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.