ஒடிசாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

ஒடிசா மாநிலம் கஜப்தி மாவட்டத்தில் இன்று காலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-12-21 10:06 GMT

 புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கஜப்தி மாவட்டத்தில் இன்று காலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

புவனேஷ்வரில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் காலை 9.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்