பஞ்சாப் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 4.1 ஆக பதிவு

அம்ரித்சார் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2022-11-14 00:28 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் நகரில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் அம்ரித்சார் நகரில் இருந்து 145 கி.மீ. வடமேற்கில் சுமார் 120 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்