அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்.!
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
இட்டாநகர்,
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று காலை 6:34 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.