ரூ.3,177 கோடியில் 318 பெட்டிகள் தயாரிக்க பெமல் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம்

ரூ.3,177 கோடியில் 318 பெட்டிகள் தயாரிக்க பெமல் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.;

Update: 2023-08-09 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவு பெற உள்ளது. தற்போது பெங்களூருவில் தினமும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாகவும், விரிவாக்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாலும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு மெட்ரோ ரெயில் பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு தேவையான ரெயில் பெட்டிகளை வாங்குவதற்காக பெமல் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதாவது ரூ.3,177 கோடியில் 318 ரெயில் பெட்டிகளை தயாரித்து கொடுக்கும்படி பெமல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது பெமல் நிறுவனம் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது. அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டில் இருந்து மெட்ரோ ரெயில் பெட்டிகளை பெமல் நிறுவனம் தயாரித்து வழங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்