மனைவி தொல்லை தாங்காமல் மெட்ரோ என்ஜினீயர் தற்கொலை

கிராமவாசி என்று விமர்சித்து திட்டியது மட்டுமல்லாமல், வாழ பிடிக்கவில்லை என்றும் கூறி மனைவி தொல்லை கொடுத்ததால் மெட்ரோ என்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2023-09-14 21:41 GMT

பெங்களூரு:

கிராமவாசி என்று விமர்சித்து திட்டியது மட்டுமல்லாமல், வாழ பிடிக்கவில்லை என்றும் கூறி மனைவி தொல்லை கொடுத்ததால் மெட்ரோ என்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மெட்ரோ என்ஜினீயர்

துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகா கே.பி.கிராஸ் அருகே குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 38). இவரது மனைவி பிரியங்கா. இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் என்ஜினீயராக மஞ்சுநாத் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், குந்தூரி பாளையாவில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று மஞ்சுநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி கிப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மஞ்சுநாத்தை அவரது மனைவி பிரியங்கா, 'கிராமவாசி' என்று குறை சொல்லி விமர்சித்து சண்டை போட்டு திட்டி வந்துள்ளார். மேலும் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மனைவி மீது வழக்கு

இதையடுத்து தன்னுடைய சகோதரருக்கு, மனைவியின் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டு மஞ்சுநாத் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் பிரியங்கா மீது மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், பிரியங்கா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்