எனது சகோதரர் பயப்பட மாட்டார்: பிரியங்கா காந்தி கருத்து

பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Update: 2023-03-23 08:52 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான்.

அவன் உண்மையைப் பேசி வாழ்பவன், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுடன் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்