மனநலம் பாதித்த ெபண்ணை கர்ப்பமாக்கிய மர்மநபர்

மனநலம் பாதித்த ெபண்ணை கர்ப்பமாக்கிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-07-03 21:39 GMT

யாதகிரி: யாதகிரி மாவட்டம் சித்தாப்புரா பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். மனநலம் பாதித்த இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் அந்த பெண் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ அந்த மனநலம் பாதித்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளனர். மனநலம் பாதித்தவர் என்பதால் பெண்ணும் இதுபற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணுக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த பெண்ணை, அவரது பாட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தான் மர்மநபர் யாரோ, அந்த பெண்ணை கற்பழித்திருப்பதும், தற்போது அந்த பெண் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தாப்புரா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்