நிட்பள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சாவு

நிட்பள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Update: 2023-02-15 16:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னட மாவட்டம் புத்தூர் தாலுகா நிட்பள்ளி கிராம பஞ்சாயத்தை அடுத்த பெத்தம்பாடியை சேர்ந்தவர் முரளிதர் பட் (வயது 28). இவர் நிட்பள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.இந்தநிலையில் இவர் தனது நண்பர்களான பெத்தம்பாடியை சேர்ந்த திலீப்குமார் ராவ், சசிகுமார் மற்றும் நவநீத் ஆகியோருடன் வெளியே சென்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். சந்தியாறு-பெத்தம்பாடிக்கு இடைப்பட்ட பாலக்கா பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தரிகெட்டு ஓடியது. இதை அறிந்த டிரைவர் காரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற கார், சாலையோரம் இருந்த 2 மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார், அந்த பகுதியில் இருந்த 50 பள்ளத்தில் இருந்த விவசாய நிலத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முரளிதர்பட், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள், புத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த முரளிதர்பட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்