எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை

நாடாளுமன்ற கட்டிடத்தில் எதிர்க்கட்சிகளின் குழு ஆலோசனை நடத்தியது.;

Update: 2023-07-31 05:46 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் சென்று, திரும்பிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டணி கட்சித்தலைவர்களிடம் கள நிலவரம் குறித்து விளக்கினர்.

இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர். பாலு, திருமாவளவன், கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து, விவாதம் நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

26 கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியின் 21 எம்.பி.க்கள் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்கு சென்று அங்கு வன்முறையால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்