பிச்சை எடுத்தே பெரும் பணக்காரர் ஆன நபர்: மும்பையில் கோடிக்கணக்கில் சொத்து

மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்து செல்வந்தரான சொத்து மதிப்பு ரூ.7.50 கோடி எனவும். இவரது தினசரி ரூ.2 ஆயிரம் வருமானம் பார்த்து வருவதாக தெரியவந்தது.

Update: 2023-07-07 15:32 GMT

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படும். இதே வேளையில் ரெயில் நிலையத்தை யொட்டி பிச்சைகாரர்களின் கூட்டம் வரிசையாக காணப்படும். இந்த வரிசையில் பிச்சை எடுக்கும் ஒருவர் பணக்கார பிச்சைக்காரர் என்றால் நம்புவீர்களா? ஆமாம் அது தான் உண்மை. அந்த பிச்சை எடுக்கும் நபர் பரத் ஜெயின் என அடையாளம் காணப்பட்டது. பொருளாதார ரீதியாக மும்பையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவி தேடி அலையும் நபர்கள் தான் பிச்சைக்காரர்களாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில் பிச்சை எடுத்து வரும் பரத் ஜெயின் மும்பையில் விலையுர்ந்த வீடுகள் சொந்தமாக்கி வைத்து உள்ளார். இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.7 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவர் 10 மணி முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் வரையில் சம்பாத்தியம் பெற்று வருகிறார். இவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதைத்தவிர தானேயில் 2 கடைகள் வைத்திருப்பதாகவும் மும்பையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2 bhk பிளாட் வீடு வாங்கி உள்ளார். அதனை ரூ.30 ஆயிரத்திற்கு வாடகைக்கு விடுத்து வருமானம் பார்த்து வருகிறார். அவரது குடும்பம் மாற்று வருமானம் பெறும் வகையில் எழுதுபொருட்கள் கடை நடத்தி வருவதாக தெரியவந்தது. இவர் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்