பயங்கரவாத தாக்குதல் லைவ் செய்தியில் தவறான நோக்கத்திற்கு ஊடகங்கள் இடம் அளித்து விட கூடாது: மத்திய மந்திரி பேச்சு

பயங்கரவாத தாக்குதல் லைவ் செய்தி வெளியீட்டில் பயங்கரவாதிகளின் தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விட கூடாது என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறியுள்ளார்.

Update: 2022-11-29 06:37 GMT

புதுடெல்லி,


ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபை கூட்டத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகுர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை லைவாக வெளியிடும்போது, தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான தடயங்களை அளிப்பதோ, அவர்களின் தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது என்பது உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடியானது, நாம் அனைவருக்கும் சோதனையான காலகட்டம் ஆகவுள்ளது. ஊரடங்கின்போது, வெளியுலகுடன் மக்களை இணைக்கும் பணியை ஊடகங்கள் செய்தன.

அதுபோன்ற தருணங்களில் சரியான மற்றும் தக்க தருணத்தில் தகவல்களை வழங்குவது என்பதும் ஊடகங்களின் கடமையாகும் என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்