ஐ.நா. முன்பு இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகள்: சுவிஸ் தூதரை அழைத்து இந்தியா எதிர்ப்பு

ஐ.நா. முன்பு இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுவிஸ் தூதரை அழைத்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

Update: 2023-03-05 20:40 GMT

புதுடெல்லி,

சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. கட்டிடத்துக்கு எதிரில் இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில், இதற்காக இந்தியாவுக்கான சுவிஸ் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியது. அதை ஏற்று மத்திய வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு வந்த சுவிஸ் தூதரிடம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

அதற்கு சுவிஸ் தூதர், இந்தியாவின் கவலைகளை சுவிஸ் அரசிடம் தெரிவிப்பேன் என்று உறுதி அளித்தார்.

மேலும், ''ஜெனீவாவில் அனைவருக்கும் சுவரொட்டி ஒட்ட அனுமதி உண்டு. மற்றபடி, அதில் உள்ள கருத்துகளை சுவிஸ் அரசு ஆதரிக்கவும் இ்ல்லை, அவை சுவிஸ் அரசின் நிலைப்பாடும் அல்ல'' என்று தூதர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்