பா.ஜனதாவுக்கு எம்.டி.பி. நாகராஜ் அளித்த புதிய 'அதிர்ச்சி'

பா.ஜனதாவுக்கு எம்.டி.பி. நாகராஜ் அளித்த புதிய அதிர்ச்சி அளித்துள்ளார்.

Update: 2023-04-07 18:45 GMT

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா மந்திரியான எம்.டி.பி. நாகராஜ் அக்கட்சிக்கு புதிய 'அதிர்ச்சி' அளித்துள்ளார். பணக்கார வேட்பாளரான எம்.டி.பி. நாகராஜ், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்த நிலையிலும் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பின்னர் இடைத்தேர்தலில் நின்று அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு எம்.எல்.சி. பதவியை வழங்கி பா.ஜனதா மந்திரியாக உயர்த்தியது. இந்த நிலையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். நேற்று பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பாவை சந்தித்த எம்.டி.பி. நாகராஜ் தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதனால் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டாம் என்றும், தனக்கு பதிலாக தன்னுடைய மகனுக்கு டிக்கெட் வழங்கமாறும் கூறி கோரிக்கை வைத்திருக்கிறார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'நான் எடியூரப்பாவை சந்தித்து எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை கட்சி கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடமும் இதே கோரிக்கையை வைத்துள்ளேன். நான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை. என் மகனுக்கு ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிட பா.ஜனதா டிக்கெட் வழங்க வேண்டும். அந்த தொகுதியில் என மகனை வெற்றிபெற வைப்பேன். அதுமட்டுமின்றி பா.ஜனதா சார்பில் குருப சமுதாயத்தினர் 8 பேருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்' என்று கூறினார். எம்.டி.பி. நாகராஜின் இந்த அதிர்ச்சி வைத்தியம் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்