நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, கனிமங்கள் இருக்க வாய்ப்பு; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2023-09-10 21:31 GMT

ஆனேக்கல்:

நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மயில்சாமி அண்ணாதுரை

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநாடு ஒன்று நடந்தது.

இந்த மாநாட்டை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. நிலவில் தற்போது இரவு ஏற்பட்டு இருப்பதால் பிரக்யான் ரோவர் ஆய்வு பணியை முடித்து தூக்க நிலைக்கு சென்றுள்ளது. நிலவில் பகல் வரும்போது மீண்டும் அது ஆய்வு பணியை தொடங்கும்.

கூடுதல் தகவல்கள்

பிரக்யான் ரோவரின் ஆய்வுக்கு பிறகு நிலவின் தென்துருவத்தில் உள்ள கனிமங்கள் குறித்து நமக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. நீர், வாயு மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் நிலவில் உள்ள கனிமங்கள் குறித்த முழு விவரங்கள் நமக்கு கிடைக்கும். அதன்பிறகு மனிதன் வாழ உகந்த இடமாக நிலவு இருக்குமா என்பது குறித்து தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடினார். மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்