'மக்களின் துயரங்கள் விலகி அமைதி கிடைக்கட்டும்'

கர்நாடக மாநில மக்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் துயரங்கள் விலகி அமைதி கிடைக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.;

Update: 2022-10-24 18:45 GMT

பெங்களூரு:

தீபாவளி வாழ்த்து

கர்நாடகத்தில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் நேற்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி, கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் மந்திரிகள் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மக்களின் துயரங்கள் விலகி...

கன்னட நாட்டு மக்களுக்கு தீபத்திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாநில மக்களின் அனைத்து விதமான துயரங்களும் விலகி, நிம்மதி மற்றும் அமைதி கிடைக்கட்டும். இந்த தீப திருநாளில் மக்களுக்கு சந்தோஷம், எல்லோரின் வாழ்விலும் ஆரோக்கியம், சுகம் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தீபம் போல் எல்லாருடைய வாழ்விலும் தீப ஒளி வீசட்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல், முன்னாள் முதல்-மந்திரிகளான எடியூரப்பா, குமாரசாமி மற்றும் மந்திரிகள் டுவிட்டர் மூலம் கர்நாடக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்