சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு: 100 வீடுகள் சேதம்

சிக்கிம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-06-20 00:30 GMT

காங்டாக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கு சிக்கிம் மற்றும் கியால்ஷிங் மாவட்டங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் கோலா பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய பாலம் ஒன்று நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் இந்த நிலச்சரிவில் பல சாலைகளும் பலத்த சேதமடைந்தன.

பாதிகப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்