ைமனர் பெண்ணை திருமணம் செய்த முதியவர் பிடிபட்டார்
ைமனர் பெண்ணை திருமணம் செய்த முதியவர் பிடிபட்டார்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் அனில் (வயது 62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் கார்வார் மகளிர் போலீசார், அனில் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மைனர்பெண்ணை அனில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனிலை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.