மராட்டியம்: கார் விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மருமகன் ஐ.சி.யூ.வில் அனுமதி
எம்.எல்.ஏ. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனை பரிசோதனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப தயாரானார்கள்.;
புனே,
மராட்டியத்தில் எம்.எல்.ஏ. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் மற்றும் மகள் இருவரும் வழக்கம்போல் பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றனர்.
இதன்பின் இந்த தம்பதி வீட்டுக்கு திரும்ப தயாரானார்கள். அவர்கள் காருக்குள் ஏற முயன்றபோது, தவறுதலாக காரின் ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார். இதனால், கார் விரைவாக சென்று சுவரில் முட்டியுள்ளது.
இந்த சம்பவத்தில் சமீர் கானுக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.