ஜார்கண்டில் முன்னாள் ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்
போலீசுக்கு தகவல் கொடுப்பவர் என கருதிய மாவோயிஸ்டுகள் வீடு புகுந்து சுட்டுக்கொலை செய்தனர்.
சாய்பாசா,
ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கடம்திஹா பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஷிஜோடா கிராமத்தை சேர்ந்தவர் சுக்லால் பூர்டி. இவர் எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர் ஆவார்.
இவரை போலீசுக்கு தகவல் கொடுப்பவர் என கருதிய மாவோயிஸ்டுகள் வீடு புகுந்து சுட்டுக்கொலை செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து மாவோயிஸ்டு குழுவின் சில துண்டு பிரசுரங்கள் மீட்கப்பட்டன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.