ராகுல் காந்தியை சந்தித்த மனு பாக்கர்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் இன்று சந்தித்தார்.;
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 (வெண்கலம்) மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் இன்று சந்தித்தார். 2 வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே சோனியா காந்தியை மனு பாக்கர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.