எனது இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டது: நாளிதழில் வெளியான வினோத விளம்பரம்
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று நகைச்சுவைவாயாக பதிவிட்டுள்ளார்;
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவர் பெயரில் வெளியான அந்த விளம்பரத்தில், எனது இறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொலைந்துவிட்டதாகவும் சான்றிதழ் எண்ணும் பகிரப்பட்டுள்ளது.
இதை ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று நகைச்சுவைவாயாக பதிவிட்டுள்ளார். இந்த நாளிதழ் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. தவறுதலாக இந்த விளம்பரம் அச்சிடப்பட்டு விட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக வெளியானதா? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.