மணிப்பூர் நிலச்சரிவு: மீட்கப்பட்ட 5 வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை; விமானப்படை மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம்!

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-07-04 07:01 GMT

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் புதன்கிழமை இரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் பலர் சிக்கிக் கொண்டனர். உயிரிழந்தவர்களில் ரெயில்வே ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்குவர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக இன்று காலை, அவர்களது உடல்களுக்கு இம்பால் சர்வதேச விமான நிலையத்தில் முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின், விமான நிலையத்தில் இருந்து, விமானப்படை விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்