மணிப்பூர் விவகாரம்: டெல்லியில் மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி, ஜந்தர் மந்திரில் மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைப்பு
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்திரில் மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மணிப்பூர் விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்றும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.