மணிப்பூர் விவகாரம்! வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய மந்திரி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-07 09:04 GMT

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததை அடுத்து, தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வன்முறையை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும், மணிப்பூரில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 13,000 பொதுமக்கள் மீட்கப்பட்டு தற்போது பல்வேறு தற்காலிக தங்கும் இடங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்பால் நகரம் மற்றும் பிற இடங்களில் இன்று சந்தைகள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்