மணிப்பூர் சட்டசபை அமளியால் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அமளியால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-08-29 10:31 GMT

இம்பால்,

மணிப்பூர் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்.21-ல் துவங்கி மார்ச் 3-ல் நிறைவடைந்தது. பின் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே மணிப்பூரில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம், பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்றது போன்ற சம்பவங்களால் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாமல் முடங்கி போனது.

தற்போது, அங்கு சகஜ நிலை நிலவுவதால், மணிப்பூர் சட்டசபை இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கூடியது. அவை கூடியதும், கூட்டத்தொடரை 5 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையை சபாநாயகர் சத்யபிரதா ஒத்திவைத்தார்.

160க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த, வன்முறைக்கு பிறகு இது முதல் சட்டசபை கூட்டமாகும். 10 குக்கி எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. முன்னதாக, குக்கி சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கூட்டத்தொடரை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்