70 கோடி நபர்களின் தகவல்களை திருடி விற்ற பலே ஆசாமி கைது!

24 மாநிலங்களில் உள்ள 66.9 கோடி பேரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை விற்ற வழக்கில் வினய் பரத்வாஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2023-04-02 05:34 GMT

theபுதுடெல்லி,

அமேசான், நெல்பிளிக்ஸ், யுடியூப் பேடிஎம்,போன்பே இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இராணுவ அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பல முக்கிய நிறுவனங்கள் உட்பட நாட்டின் 24 மாநிலங்களைச் சேர்ந்த 66.9 கோடி நபர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பானது. இந்தத் தகவல் திருட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கோடி பேரின் தகவல்களும் அடங்கியிருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஐதராபாத் மாநிலத்தில் வினய் பரத்வாஜ் என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாட்டின் 24 மாநிலங்களில் இந்தத் தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவர் நான்கு பெரும் நகரங்களில் பல ஊழியர்களை பணி அமர்த்தியுள்ளார். இந்தக் கும்பல், டி.மார்ட், பான் கார்டு, அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்தும் ராணுவ அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் ஆகியவர்களின் தகவல்களை திருடியுள்ளனர்.

இப்படி 70 கோடி நபர்களின் தகவல்களை திருடி 104 பிரிவுகளாக விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள வினய் பரத்வாஜ் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்