மத்திய மந்திரியின் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை - மந்திரி மகனின் துப்பாக்கி பறிமுதல்

மத்திய மந்திரியின் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். மந்திரி மகனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-09-01 05:29 GMT

லக்னோ,

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது. மத்திய மந்திரி கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், மத்திய மந்திரி கவுஷல் வீட்டில் இன்று இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வினய் சீனிவாசன் என்ற அந்த இளைஞர் மத்திய மந்திரி மகன் விகாஷின் நண்பர் ஆவார். மத்திய மந்திரி விகாஷின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் இளைஞர் சீனிவாசன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி தன் மகன் விகாஷ் உடையது தான் என கூறிய மத்திய மந்திரி ஆனால் சம்பவம் நடந்த போது தன் மகன் வீட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய மந்திரியின் மகன் எங்கு உள்ளார்? என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.     

Tags:    

மேலும் செய்திகள்