மரம் முறிந்து விழுந்ததில் சிக்கிய நபர் நூலிழையில் உயிர்பிழைப்பு - வைரலாகும் வீடியோ
கேரளாவில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்ட நபர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
வயநாடு,
கேரளாவில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்ட நபர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் வயநாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில் குஞ்சுமோன் என்ற நபர் சாலையில் குடையுடன் நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் வளர்ந்திருந்த குல்மொஹர் வகை மரமொன்று திடீரென முறிந்து விழுந்தது.
இந்த நிலையில் மரம் முறிந்து விழுவதை கவனித்த குஞ்சுமோன் லாவகமாக பெரிய தண்டு தன்மேல் விழுவதில் இருந்து நூலிழையில் தப்பித்தார். கிளைகளுக்கிடையில் சிக்கிக்கொண்ட குஞ்சுமோன் சிறிது நேரத்தில் பாதுகாப்பாக எழுந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.