தீப்பெட்டி தராததால் காவலாளி தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்

இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-12-09 00:16 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியின் டர்ப்ஹி நஹாவை சேர்ந்த இளைஞன் முகமது அடில் அஸ்மாலி ஷேக் (வயது 22). இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் பல்பூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பிரசாத் பனுசிங் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக நடந்து என்ற இளைஞன் முகமது காவலாளி பிரசாத் இடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால், பிரசாத் தீப்பெட்டி கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் முகமது அருகில் கிடந்த கல்லை எடுத்து காவலாளி தலையில் போட்டுள்ளார். இதில் காவலாளி பிரசாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலாளி பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றவாளி முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்