சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒருவர் பலி

சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-04-22 08:09 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாபூர் மாவட்டம், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்வெண்டி கிராமத்தில் உள்ள காட்டில் காலை அக்கிராமத்தை சேர்ந்த காடியா என்பவர் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மண்ணுக்கு அடியில் நக்சலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி மீது தவறுதலாக கால் வைத்ததில் அது வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் காடியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த காடியாவின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் மேலும் சில கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்