7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-07 21:10 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அந்த வீட்டிற்கு பால் பாக்கெட் விநியோகிக்கும் 40 வயது நபர் வந்துள்ளார்.

வீட்டில் அந்த சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அந்த நபர் தனது செல்போனில் கேம் விளையாட கற்றுத்தருவதாக கூறி சிறுமியை அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்