இந்து மத கடவுள் சிலையை நதியில் கரைக்க சென்றபோது துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம் - குண்டு பாய்ந்து இளைஞர் பலி

இந்து மத கடவுள் சரஸ்வதி சிலையை கங்கை நதியில் கரைக்க எடுத்து சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-01-27 23:01 GMT

பாட்னா,

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நேற்று இரவு இந்து மத கடவுள் சரஸ்வதி சிலையை கங்கை நதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

அந்த ஊர்வலத்தில் செட்பூர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சிலர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, திடீரென ஊர்வலத்தில் பங்கேற்ற திராஜ் என்ற 23 வயது இளைஞர் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதில் படுகாயடைந்த அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்